விதிமுறைகளும்  நிபந்தனைகளும்

1.தெரிவு

நீங்கள் தெரிவு செய்யும் பொருட்களின் அளவு, வடிவமைப்பு, நிறம், விலை, பொதிகட்டணம் மற்றும் ஏனைய அம்சங்களை சரியாக அவதானித்து தெரிவு செய்ய வேண்டும். உங்கள் தெரிவு தொடர்பான தவறுகளிற்கு நாம் பொறுப்புடையவர்களல்ல.

2.தகவல்களை உறுதிப்படுத்தல்

உங்களின் பெயர்கள், முகவரிகள், கடன் அட்டை தகவல்கள், மற்றும் இவைதொடர்பான ஏனைய தகவல்களை மீண்டுமொருமுறை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3.கட்டளை

நீங்கள் எமக்கு தெரிவுசெய்து அனுப்பியுள்ள பொருட்களுக்கான கட்டணம் எமது கணக்கில் வரவு உறுதிப்படுத்தப்பட்ட பின் உங்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.

4.மாற்றுதல்

நாம் கூறிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுடன் பொருட்களை வேறாக்கல் , வெட்டுதல், கிழித்தல், தைத்தல், பாவித்தல், பழுதடைய செய்தல் போன்ற காரணங்கள் தவிர்த்து ஏனைய காரணங்களுக்காக உங்கள் பொதி கிடைக்கப்பெற்று இரண்டு நாட்களுக்குள் பொருளை எமது நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பி மாற்றமுடியும் அத்துடன் மாற்றும் பொருட்களுக்கு கான போக்குவரத்து கட்டணங்களை தாங்களே ஏற்கவேண்டும்.